தமிழ்த்தாய் வாழ்த்து:       நீராருங் கடலுடுத்த        நிலமடந்தைக் கெழிலொழுகும்       சீராரும் வதனமெனத்      திகழ்பரத கண்டமிதில்       தெக்கானமும் அதிற்சிறந்த        திராவிடநல் திருநாடும்       தக்கசிறு பிறைநுதலும்        தரித்தநறுந் திலகமுமே       அத்திலக வாசனைபோல்       அனைத்துலகும் இன்பமுற       எத்திசையும் புகழ்மணக்க        இருந்தபெரும்       தமிழணங்கே!   தமிழணங்கே!        உன் சீர் இளமை திறம் வியந்து       செயல் மறந்து வாழ்த்துதுமே!       வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!  -  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை     

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? (Why should we vote?)

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்திய குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான தலையாய பணி காத்துகொண்டிருக்கிறது.

இந்த முறை தேர்தலில் நான் வாக்கு அளிக்க மாட்டேன் அல்லது ஏன் வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கும் நண்பர்களே, தங்களுடைய பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடம் இதை படிக்க ஒதுக்குங்கள்.

வாக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய பிரஜையின் உரிமை. நமக்கான உரிமையை விட்டு கொடுப்பதால் நாம் நம்முடைய அடிப்படை அங்கிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த தவறுகிறோம்.

தன் சமுதாய முன்னேற வேண்டும் என்று ஏங்கும் ஒவ்வொரு இந்திய பிரஜையும் நிச்சயமாக தன் அடிப்படை கடமைகளில் ஒன்றான வாக்கு அளிப்பதில் இருந்து தவற மாட்டான்.

வாக்கு அளிக்கும் உரிமை தங்களுக்கு மறுக்க படும் போது தங்கள் உணர்வு எப்படி இருக்கும் என்பதை வாக்களிக்காமல் இருக்கும் நண்பர்களே சற்று சிந்தித்து பாருங்கள். இது கற்பனை தர்க்கம் அல்ல - நிஜம். இந்த இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் கூட இன்னும் பல நாடுகளில் நிரந்திர குடியுரிமை பெற்ற அந்நாட்டு பிரஜைகள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள் இல்லை என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

தங்களுடைய பொன்னான அறிவையும், நேரத்தையும் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதனை அலசி ஆராய பயன்படுத்தி நம் நாட்டிற்கு நல்ல தலைவர்களை தங்கள் உரிமைகளை பயன்படுத்தி கொடுங்கள். வாழ்க இந்தியாவின் ஜனநாயகம்! ஜெய் ஹிந்த்!

மின்னம்பலத்தில் தமிழ் நூல்கள்

தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னம்பலத்தில் அமைத்து, உலகில் எங்கு தமிழர் வாழ்ந்தாலும், எந்த நூலைப் படிக்க விரும்பினாலும் மின்னம்பலத்தில் வைத்தே படிக்கவோ, இறக்கிக் கணிப்பொறியில் வைத்துப் படிக்கவோ, அச்செடுத்துப் படிக்கவோ வசதிசெய்யும் திட்டமே மதுரைத் திட்டம்.

பாரதியார், பாரதிதாசன், கல்கி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்ற பலரின் நூல்களை மின்னம்பலத்தில் பார்க்கலாம். வைரமுத்து, ஜெயகாந்தன் போன்றோர் தம் படைப்புகளை அம்மின்னம்பலத்தில் வெளியிட உரிமை கொடுத்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளரின் நூல்களும் இடம்பெற்றுள்ளன.

மின்னம்பல முகவரி: www.tamil.net/projectmadurai
Page copy protected against web site content infringement by Copyscape

Followers