தமிழ்த்தாய் வாழ்த்து:       நீராருங் கடலுடுத்த        நிலமடந்தைக் கெழிலொழுகும்       சீராரும் வதனமெனத்      திகழ்பரத கண்டமிதில்       தெக்கானமும் அதிற்சிறந்த        திராவிடநல் திருநாடும்       தக்கசிறு பிறைநுதலும்        தரித்தநறுந் திலகமுமே       அத்திலக வாசனைபோல்       அனைத்துலகும் இன்பமுற       எத்திசையும் புகழ்மணக்க        இருந்தபெரும்       தமிழணங்கே!   தமிழணங்கே!        உன் சீர் இளமை திறம் வியந்து       செயல் மறந்து வாழ்த்துதுமே!       வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!  -  மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை     

தமிழ் இலக்கியங்கள் மற்றும் இணைய புத்தகங்கள்

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் தமிழ் நூல்களைப் பற்றி நமது களத் நண்பர்களுக்கு ஓர் அறிமுகம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ் நவீனங்கள், சிறுகதைகள் ஆகியவை பிடிஎப் வடிவில் தரப்பட்டுள்ளன. இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயனுறலாம்.


1. http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
2.http://books.google.com/books%20id=KTMEAAAAQAAJ&printsec=frontcover&dq=Beschi&lr=&as_brr=1#PPA68,M1
3. http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm
4
. http://dictionary.sarma.co.in/Default.aspx

பயனுள்ள வலைத்தளம் - http://www.tamilamirtham.org/

தமிழ் சம்பந்தமான தகவல்களை சேகரித்து அதை உலக மக்களுக்கு தமிழ் மொழி இலக்கியங்களின் மிக பெரிய தொகுப்பு கொண்டுள்ள தளமாக உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் செய்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு தொண்டு செய்வோர் ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவனம். தற்போது, தமிழ் அமிழ்தத்தின் அடிப்படை அமைப்பு மென்பொருள் மற்றும் தகவல்தளம் இரண்டும் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகானத்திலுள்ள ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இணையதள வழங்கு கணினியில் பதியப்பெற்று மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன.


இந்த இணையதளம் நம் அனைவருடைய தமிழ் சம்பந்தமான தேடல்களை பூர்த்தி செய்யும் தளமாக அமையும் என நம்புவோம்

Page copy protected against web site content infringement by Copyscape

Followers