பயனுள்ள வலைத்தளம் - http://www.tamilamirtham.org/
தமிழ் சம்பந்தமான தகவல்களை சேகரித்து அதை உலக மக்களுக்கு தமிழ் மொழி இலக்கியங்களின் மிக பெரிய தொகுப்பு கொண்டுள்ள தளமாக உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். இந்த வலைத்தளம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் செய்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு தொண்டு செய்வோர் ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவனம். தற்போது, தமிழ் அமிழ்தத்தின் அடிப்படை அமைப்பு மென்பொருள் மற்றும் தகவல்தளம் இரண்டும் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகானத்திலுள்ள ஈஷா தொழில்நுட்பங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான இணையதள வழங்கு கணினியில் பதியப்பெற்று மேலாண்மை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இணையதளம் நம் அனைவருடைய தமிழ் சம்பந்தமான தேடல்களை பூர்த்தி செய்யும் தளமாக அமையும் என நம்புவோம்
No comments:
Post a Comment